/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
சித்தானந்தர்
/
'முடியாது' என்பது இல்லவே இல்லை
/
'முடியாது' என்பது இல்லவே இல்லை
ADDED : அக் 03, 2008 10:36 AM

<P>* வெளிப்பொருட்கள் மீதான மோகமே மனிதர்களை தீய நிலைக்கு தள்ளுகிறது. இவற்றிலிருந்து விடுபட உள்மனம் சுத்தமாகவும், நல்ல முடிவை எடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மனிதர்களின் மனமும், அறிவும் ஒரு செயலை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. இதை தவிர்த்து வெளிப்பொருட்களால் எந்த செயலையும் செய்து விட முடியாது. இந்த சக்திகளை ஒன்றாக திரட்டி, உறுதியுடன் செயல்பட தொடங்கினால் வெளிப்பொருட்களின் பாதிப்புகளை வென்று விடலாம். <BR>* எந்த செலையும் 'முடியாது' என்று ஒதுக்கி வைக்காதீர்கள். ஒரு செயலை பற்றிய சரியான எண்ணம் இல்லாதவர்கள்தான் அதனை செய்யாமல் இருப்பார்கள். அதனை நிச்சயமாக செய்ய வேண்டும் என முடிவெடுத்து செயல்பட துவங்கினால், முதலில் தோல்வி கிடைப்பதுபோல தெரிந்தாலும், கடின முயற்சியால் அதில் வெற்றி காணலாம். சந்தேகம் இல்லாத மனிதர்கள் எந்த செயலையும் மிக எளிதாக செய்து விடுவார்கள்.<BR>* மனிதர்கள் ஒவ்வொருநாளும் புதுப்புது சூழலையும், வாய்ப்புகளையும் சந்திக்கிறார்கள். அதற்கேற்ப தங்களது அறிவை பயன்படுத்தி, உள்ளத்தில் உறுதியுடன் செயல்பட்டால் மட்டுமே அதில் வெற்றி காண முடியும். புதிய சூழலை கண்டு அச்சம் கொண்டு ஒதுங்கிவிட்டால், வாழ்வில் வெற்றி பெற முடியாது. உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, அது சரிப்படாது என்று ஒதுங்கிக் கொள்வதைவிட, அதனை தன்னம்பிக்கையுடன் செயல்படுத்தி வெற்றி காண வேண்டும்.</P>